2 பெண்கள் உள்பட 8 பேர் கைது
சென்னை, நவ. 6–
மண்ணடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் பேதைப்பொருள் வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து மண்ணடி, மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 8 நபர்களை பிடித்து அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த முகமது சாலிக், அஸ்ரப் அலி, லைலாத் பதாவியா, இர்பான், லோகேஸ்வரன், சதிஷ்குமார், முகமது யாசின், சமீரா ரக்ஷித் ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 10 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 8 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
![]()




