செய்திகள்

மணலி ஏரியில் ரூ.6.70 கோடியில் செய்த புனரமைப்புப் பணிகள்:

Makkal Kural Official

ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சி

சென்னை, டிச.17–

சென்னை மணலி ஏரியில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளின் காரணமாக தற்போது பெய்த மழையினால் ஏரியில் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மணலி மண்டலம், வார்டு -20க்கு உட்பட்ட மணலி ஏரியில் 29 ஏக்கர் பரப்பளவில் (1,17,160 சதுர மீட்டர்) 1.20 மீ. ஆழத்துடன் 4 லட்சம் கனஅடி நீர்த்தேக்கம் உடையதாக இருந்தது. இதில் தற்போது அம்ரூத் மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 மீட்டர் ஆழத்துடன் 12 லட்சம் கன அடி நீர்த்தேக்கம் உடையதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரியில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கரைகளைப் பலப்படுத்துதல், அணைப் பகுதியில் சரளை கற்களைப் பதித்தல், சுற்றுச்சுவர் அமைத்தல், ஏரியில் மழைநீர் சேர்வதற்கும், உபரிநீர் வெளியேறுவதற்குமான கட்டமைப்புகள் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளும், சிறுவர் விளையாட்டுப் பகுதி, பூங்கா, அமர்வதற்கு இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம், நடைபாதை, கைப்பிடிகள், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாவலர் அறை, சிற்றுண்டி உணவகம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மணலி ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளின் காரணமாக தற்போது பெய்த மழையினால் இந்த ஏரியில் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் மழைநீர் பாதிப்பு குறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *