ரவீந்திர சவான்
செய்திகள்

மகாராஷ்டிரா புதிய பாஜக தலைவராக ரவீந்திர சவான் பொறுப்பேற்பு

Makkal Kural Official

மும்பை, ஜூலை 1–

மகாராஷ்டிரா பாஜக புதிய தலைவராக ரவீந்திர சவான் இன்று பொறுப்பேற்கிறார்.

மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவராக மூத்த பாஜக தலைவராக ரவீந்திர சவான், இன்று பொறுப்பேற்கிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ரவீந்திர சவான் பொறுப்பேற்பு

தற்போதைய தலைவராக உள்ள சந்திரசேகர் பவன்குலேவிடமிருந்து ரவீந்திர சவான் பொறுப்பேற்றுக்கொள்வார். புதிய மாநிலத் தலைவர் தேர்வுக்காக மத்திய பாஜக சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனுப்பப்பட்டிருந்தார். மாநில அலுவலகத்தில் உயர்மட்ட கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தேர்வு செயல்முறை நிறைவடைந்தது.

கொங்கண் பகுதியில் பாஜகவை விரிவுபடுத்துவதில் ரவீந்திர சவான் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும், செயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

டோம்பிவ்லி தொகுதியில் இருந்து நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சவான். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணியாற்றி உள்ளார். தேவேந்திர பட்னாவிஸின் முதல் அமைச்சரவையில் மாநில அமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே அரசில் அமைச்சரவை அமைச்சராகவும் முன்பு பணியாற்றியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *