சென்னை, நவ. 20:
சொத்துக்களை அபகரித்து வங்கிகளில் சுமார் ரூ.8.3 கோடி பணம் பெற்று மோசடி செய்த 2 வழக்குகளில் தலைமறைமாறக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர், தனது தாயார் ருக்குமணி என்பவருக்கு சொந்தமாக 1 கிரவுண்ட் மற்றும் 1,262 சதுரடி கொண்ட கட்டிடத்துடன் கூடிய இடம் உள்ளதாகவும், 2019ம் ஆண்டு ருக்குமணி இறந்துவிட்ட நிலையில், சிலர் கூட்டாக சேர்ந்து தனது தாயார் ருக்குமணி போல ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலம் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர். பின்னர் மேற்படி சொத்தை தனியார் வங்கியில் அடமானம் வைத்து, ரூ.3.03 கோடி பணத்தை கடனாக பெற்று கடனை செலுத்தாததால், வங்கியிலிருந்து மேற்படி இடத்தில் கடன் நிலுவை நோட்டீஸ் ஒட்டியுள்ளதாகவும், தனது தாயார் பெயரிலுள்ள இடத்தை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாராசந்த், 13.02.2024 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்படி வழக்கில் தலைமறைவாக இருந்த கமலகண்ணன் உட்பட தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
மேலும் மத்திய குற்றப்பிரிவு மற்றொரு வழக்கில் கமலகண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ஷியாஸ் புதுவிட்டில் என்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கும், அவரது மனைவிக்கும் விற்பது போன்று போலியான விற்பனை பத்திரத்தை நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது போல உருவாக்கி, அதனடிப்படையில், எழும்பூரிலுள்ள எஸ்பிஐ வங்கியில் அடமானமாக வைத்து இருவர் பெயரிலும் மொத்தம் ரூ.5 கோடி கடன் தொகையாக பெற்று மோசடி செய்தனர்.
மேற்படி வழக்குகளில் தொடர்புடைய தலைமைறைவு எதிரிகளை கைது செய்ய கமிஷனர் ஆ.அருண் உத்தரவின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின் படி, நிலமோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்தி கமலகண்ணன் என்பவரை பெங்களூரில் கைது செய்தனர். கமலகண்ணன் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் 13 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
![]()





