செய்திகள்

பொன்னேரி அருகே 123 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள்கள்

Makkal Kural Official

பொன்னேரி டிச. 22:

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மடிமை கண்டிகை, வஞ்சிவாக்கம், ஆசானபுதூர், வீரங்கி வேடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கு செல்ல தினசரி நெடுந்தூர பயணம் மேற்கொள்கின்றனர். சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதால் காலதாமதம் ஆகிறது. மாலை நேரங்களின் பயத்துடன் குழந்தைகள் வீடு வந்து சேர்கின்றனர். மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக பள்ளி நேரத்தை துரிதமாக சென்றடைய இந்த மிதிவண்டி வழங்கும் திட்டம் சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு ஏபிஎஸ் மறைன் சர்வீசஸ் லிமிடெட் இயக்குனர் ஆரதி நாராயணன் ஒத்துழைப்போடு 123 மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிளை சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குனர் ஹாஜா மொய்தீன், காவல் உதவி ஆணையர் சங்கர் மற்றும் காவல் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் சமூக சேவகர் அசோக் பிரியதர்ஷன், வழக்கறிஞர் துரை மகேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *