சென்னை, ஜன. 14–
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்:
சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும். காலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





