சென்னை: பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழகமுதலமைச்சர் ஸ்டாலின். வடகிழக்குப் பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டநிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும்வகையில், ரூபாய் 111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 33%-க்கு மேல் பயிர்சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்அறிவித்தார். பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 84,848 விவசாயிகள்பயன் பெறும் வகையில் நிவாரணத் தொகையாக ரூ 111.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில்பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண்மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின்வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 01.12.25 அன்று ஆய்வு கூட்டம்நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கணக்கெடுப்பு நெல் பணி உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாகஹெக்டேருக்கு ரூ. 20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில்மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டிட்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால்பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணைஇன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும்2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தவேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில்ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அஉத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில்நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
![]()





