செய்திகள்

பொங்கலுக்குப் பிறகு தவெகவின் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும் செங்கோட்டையன் பேட்டி

Makkal Kural Official

கோவை, டிச. 20–

பொங்கலுக்குப் பிறகு தவெகவின் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும் என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கே.ஏ. செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தவெக மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக தவெக சார்பில் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் .தவழும் குழந்தைகள்தான் பெரியவராவார்கள். பெரியவரான பிறகுதான் தன்னாட்சி நடத்துவார்கள். இதுதான் வழக்கமான ஒன்று.

நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும். அடுத்த கூட்டம் பற்றி தலைவரிடம் இன்று பேசிவிட்டு பின்னர் எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.தேர்தல் வியூகம் பற்றிய கேள்விக்கு, பொங்கல் முடிந்ததற்குப் பிறகு எங்களுடைய திருப்புமுனையைப் பார்த்து நாடே வியக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *