சென்னை, டிச. 14–
பெரியமேடு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த நபரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முக்தார் ஆலம், நேற்று ரெயில் மூலம் சென்னை சென்டிரல் இரயில் நிலையம் வந்திறங்கி, புழல் செல்வதற்காக பார்க் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் வந்த ஒரு நபர் திடீரென முக்தார் ஆலம் பாக்கெட்டில் வைத்திருந்த விவோ செல்போனை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்து முக்தார் ஆலம் பெரியமேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் விவோ செல்போன் உட்பட 3 செல்போன்கள் மீட்கப்பட்டது. விசாரணையில் ஆனந்த் மீது ஏற்கனவே 1 போதைப்பொருள் வழக்கு உட்பட 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
![]()





