‘எண்ட்–-ஓ செக்’ என்னும் பெயரில் அறிமுகம்
சென்னை: ஜுலை 31–
பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் எண்ட்–-ஓ செக் (End -O Check) என்ற ஒரு செயல்திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான விரிவான செயல்திட்டம் இது. கருப்பையக வரிச்சவ்வு மற்றும் சினைப்பை ஆகியவற்றில் வரக்கூடிய மிகப்பொதுவான பெண் பிறப்புறுப்பு சார்ந்த இரு புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே மற்றும் பலனளிக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய காலகட்டத்திலேயே கண்டறிவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கமாகும்.
உரிய நேரத்தில் சிகிச்சைப் பெறுவதை தாமதப்படுத்துகின்ற தவறான கண்ணோட்டங்களையும், நம்பிக்கைகளையும் பெண்கள் மனதிலிருந்து அகற்றுவதும் இந்த அமர்வின் குறிக்கோளாக இருந்தது. அப்போலோ கேன்சர் சென்டர் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் அஜித் பை, அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் பி.வெங்கட் மற்றும் அப்போலோ கேன்சர் சென்டர் பெண் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணர் குமார் கப்பாலா, வானகரத்தின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் மது பிரியா, அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் நிபுணர் டாக்டர் பிரியா கபூர் ஆகியோர் நிபுணர்களது விவாத அமர்வில் பங்கேற்று கலந்துரையாடினர். டாக்டர் ஐயப்பன் நெறியாளராக செயல்பட்டார்.
“சத்தமில்லாமல் கொல்லும்” நோய் என பெரும்பாலும் அழைக்கப்படும் சினைப்பை புற்றுநோயானது, 55 மற்றும் 64 ஆண்டுகள் வயதுக்கு இடைப்பட்ட பெண்களை பாதிக்கிறது. இந்நோய் பாதிப்பு கண்டறியப்படும் சராசரி வயது 63 ஆக இருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், சிகிச்சைக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு உயிர்வாழும் விகிதம் 90% – க்கும் அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 1.57 மில்லியனாக அதிகரிக்கும் என முன்கணிக்கப்பட்டிருக்கிறது.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்டின் குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் பிரசிடென்ட் தினேஷ் மாதவன் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
![]()





