சென்னை, செப் 1–
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், – பெசன்ட்நகர் கோட்டம் ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒதுக்கீடு பெற்ற மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்திற்காக விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்தும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியினை ஆண்டிற்கு 5 மாத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சலுகை 31.3.2026 வரை செயல்படுத்தப்படும்.
ஆகவே, பெசன்ட்நகர் கோட்டத்திற்குட்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற 31.3.2015-க்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் நிலுவை தொகையினை செலுத்தாமல் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி வாரிய விதிகளின்படி விற்பனை ஆவணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![]()





