பெங்களூரு, நவ. 9–
பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை, பலாத்கார, தீவிரவாத குற்றவாளிகள் டிவி பார்த்தவாறு செல்போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரும் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சசிகலா சீருடை அணியாமல் ஷாப்பிங் சென்று வருவது போன்ற வீடியோவும், டிவி, தனி சமையலறை ஆகியவற்றுடன் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன் தனது நண்பர்களுடன் செல்போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியானது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை தண்டனை கைதி உமேஷ் ரெட்டி 2 செல்போன்களை கையில் வைத்துக்கொண்டு பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. 1997ம் ஆண்டு முதல் 2022ம் வரை 20 பெண்களை பலாத்காரம் செய்து, அதில் 18 பேரை கொலை செய்ததாக உமேஷ் ரெட்டி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு சில வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல 19 கிலோ தங்க கடத்தல் வழக்கில் கைதான தருண் ராஜ், தனது அறையில் சோபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுதவிர ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கைதான ஜுஹாப் ஹமீத் ஷக்கீல் செல்போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இவ்வாறு சிறையில் உள்ள பல்வேறு குற்றவாளிகளும் செல்போனில் பேசுவது போன்ற புகைப்படங்களும் கன்னட ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விசாரித்
![]()





