ஆவடி, அக். 31–
பூந்தமல்லி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில ஆசாமியை கைது செய்த போலீசார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பூந்தமல்லி கரையான்சாவடி சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் டி.சுபாஜினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிபுல் புராகோகின் (26) என்பவரை சோதனை செய்து அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஒரிசா மாநிலத்தில் இருந்து காஞ்சா வாங்கி வந்து பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவனை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
![]()





