ஆவடி, ஆக. 5–
பூந்தமல்லி அருகே 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெங்களூர் ஆசாமியை கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசின் “போதையில்லா தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவுப்படியும், காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி வழிக்காட்டுதலின் படியும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் அறிவுறுத்தலின் படி தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பூந்தமல்லி பைபாஸ் ரோடு எட்டிமா நகர் அம்பேத்கார் சிலை அருகே உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர்கள் கொண்ட குழு சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவரிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.
![]()





