செய்திகள்

பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது: ஆர்.பி.உதயகுமார் தாக்கு

Makkal Kural Official

சென்னை, நவ.2–

எத்தனை பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்தாலும் ராஜ்ஜியங்கள் அமைக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ஜெயலலிதா உத்தரவால் மூன்று முறை முதல்வராக இருந்தவரான, ‘அண்ணா தி.மு.க.,வின் விசுவாச தலைவர்’ என தன்னைத்தானே கூறிக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று வாய் கூசாமல் சொல்கிறார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நடை பயிற்சியில் யதார்த்தமாக சந்தித்து, பின் வீட்டிற்கே விருந்தாளியாக சென்று தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பாடினார்.

விளையாட்டு மைதானத்தில், ஸ்டாலின் மருமகனை சந்தித்து மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு அச்சாரம் போட்டார். ஜெயலலிதா கொடுத்த அடையாளத்தையே தொலைத்துவிட்டு வீதியில் நிற்கிறார். இந்நிலையில், அவருடன் செங்கோட்டையன் சேர்ந்து பசும்பொன்னில் திட்டமிட்ட அரசியல் நாடகத்தை அரங்கேற்றி, ஒரு நாள் பரபரப்பு செய்தியை உருவாக்கினர். பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியங்கள் அமைத்ததாக அரசியலில் வரலாறு கிடையாது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *