சென்னை, ஜன. 21:
சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தமிழ்நாடு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் ஆளுமைக்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநிலத்தில் உள்ள 5 புலிகள் காப்பகங்களான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் ஆகியவையின் ஆளுமைக்குழுவின் கூட்டம் இது.
இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புலிகள் பாதுகாப்பிற்கும். உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான தங்கள் கருத்துகளையும். ஆலோசனைகளையும் அளித்தனர். ஆளுமைக்குழு அறக்கட்டளைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து, வருடாந்திர செயல்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
இக்கூட்டத்தில் முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட புலிகள் காப்பக இயக்குநர்கள், ஒவ்வொரு புலிகள் காப்பகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
வனத்துறை அமைச்சர், புலிகள் பாதுகாப்பில் வனத்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், வன உயிரினங்களும் உள்ளூர் சமூகங்களின் நலனும் இணக்கமாக பாதுகாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைகளின் வருவாயினை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
சபாநாயகர் இத்துறையின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து திருப்தியைத் தெரிவித்ததுடன், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இயற்கை வளம் நிறைந்த புலிகள் காப்பகப் பகுதிகளை பாதுகாக்க அதிகாரிகள் அயராது செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அறக்கட்டளையின் துணைத்தலைவரும், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், புலிகள் காப்பக நிர்வாகத்தை, புலிகள் காப்பகத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புச் சூழலில் தமிழக அரசின் புதிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பின் பலன்களைப் பயன்படுத்தி, மாநிலத்தின் புலிகள் பாதுகாப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல புலிகள் காப்பக மேலாண்மைகள் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
![]()





