செய்திகள்

பி.எஸ்.பி.பி. பள்ளியில் 3 நாள் இசை நாட்டிய விழா

Makkal Kural Official

சென்னை, டிச. 9:

சென்னையில் பிரபலமான பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி குழுமத்தின் நிறுவனர், திருமதி ஒய்ஜிபியின் நுாற்றாண்டு இசை நாட்டிய துவக்க விழா, கே.கே., நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

தொழில் அதிபர் நல்லி குப்புசாமி துவக்கி வைத்து உரையாற்றினார்.

‘‘ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம்,திருமதி ஒய்ஜிபியின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு பள்ளிக்கு வந்தார். பின், அவரது வீட்டிற்கும் சென்றார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வீட்டிற்கு வரக்கூடாதா என, திருமதி ஒய்ஜிபியிடம் கேட்டு, அவரது வீட்டிற்கும் அப்துல்கலாம் சென்றார். இந்த நிகழ்வு, திருமதி ஒய்ஜிபியின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்துகிறது’’ என்றார்.

‘வியாபாரத்தில் இருந்த நான், கல்வித்துறையில் கவனம் செலுத்த வந்ததற்கு, அவரும் ஒரு காரணம். அவரது கல்வி முறை, கலையையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்டது. அதுதான், பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்களை தனித்து காட்டுகிறது’ என்று பெருமிதத்தோடு கூறினார்.

முடிவில் லால்குடி கிருஷ்ணன் அவரது சகோதரி லால்குடி விஜயலட்சுமியின் வயலின் கச்சேரி நடந்தது.

நேற்று மாலை பவித்ரா சீனிவாசனின் பரதநாட்டியம் நடந்தது.

துவக்க விழாவில் பள்ளியின் மூத்த ஆலோசகர் இந்திரா வைத்தியநாதன், வயலின் கலைஞர் லால்குடி விஜயலட்சுமி, இசைக் கலைஞர் அனில் ஸ்ரீநிவாசன், நல்லிகுப்புசாமி, பள்ளிகளின் ‘டீன்’ மற்றும் டைரக்டர் ஷீலா ராஜேந்திரா வயலின் கலைஞர் லால்குடி கிருஷ்ணன் உடன் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *