வேலூர் நவ. 17:
வேலூர் பிட்ஜி குளோபல் பள்ளி மாணவர்கள் உலக சாதனை 2025யின் கீழ் 25 உலக சாதனைகளை தங்களின் தனித் திறமைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அதனையொட்டி 22ந் தேதி வரை நிகழ்த்த உள்ளனர் என பள்ளி தலைமை ஆசிரியர் பொங்கல் புனிதா கூறினார்.
இது குறித்து பள்ளி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
‘‘இப்பள்ளி வேலூர் காட்பாடி அடுத்த மெட்டு குளம் பகுதியில் சிபிஎஸ்இ பிட்ஜி குளோபல் பள்ளியை தொடங்கி வெற்றிகரமாக 5ம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கிறோம். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்த முன் வந்துள்ளதை தொடர்ந்து அதை உலக சாதனை 2025யில் இடம் பெற்றிட எல்லா ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். அந்த வகையில் 22ந் தேதி வரை இந்த நிகழ்வுகள் நடக்க உள்ளது.
இதில் 9 குழு சாதனைகள், 16 தனி நபர் சாதனைகள் உள்ளன. இவை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆசியன் சாதனை புத்தகம், இந்தியன் சாதனை புத்தகம், மற்றும் தமிழன் சாதனை புத்தகம் ஆகியவற்றால் சான்றளிக்கப்பட உள்ளன. 21, 22ந் தேதிகளில் குழு சாதனைகள் நடைபெறும். 29-ந்தேதி பாராட்டு விழா நடத்த உள்ளோம்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி துணை முதல்வர் ராகுல் குமார் ஒஜா, மற்றும் அலுவலர்கள் பேபி கலைவாணி, விவேக் மனோகா, ஜீவா ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
![]()





