சிறுகதை

பாஷ்யம் சாலை – சிறுகதை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

‘கே. பாஷ்யம் ஐயங்கார், நீதிபதி பஷீர் அகமது சயீத் என்ற இரண்டு நீதிபதிகளின் பெயரால் பாஷ்யம் சாலை பெருமைப்படுகிறது என்று நினைத்தான், மணிகண்டன்.

‘தி.நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலை, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. சர். வி.பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரின் சட்ட அறிவைப் பாராட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள பாஷ்யம் சாலை, பாஷ்யம் மார்க்கெட் – சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் நினைவாகவே வைக்கப்பட்டது. 1901 முதல் 1904 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய போது, இவரின் அறிவாற்றலுக்காகச் சட்டமேதை என்று புகழப்பட்டார்.’

‘ஆழ்வார் பேட்டையில் உள்ள பாஷ்யம் – பஷீர் அகமது சாலை வேறு வரலாறு சொல்கிறது. இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1932 ஜனவரி 26–ந்தேதி அதிகாலை 2 மணிக்கு போலீஸ் பாதுகாப்பையும் மீறி புனித ஜார்ஜ் கோட்டையின் 150 அடி உயரக் கொடி மரத்தில் ஏறி, பிரிட்டிஷ் யூனியன் ஜாக்கை கீழே இறக்கி விட்டு, இந்தியத் தேசியக் கொடியை ஏற்றியவர். இதனார் பிரிட்டிஷ் அரசு அவர் தலையில் கள்ளுப்பானைகளை உடைத்து கொடுமைப்படுத்தியது. இந்திய அரசு வழங்கிய ஓய்வூதியத்தை ஏற்க மறுத்தவர்.

இவர் சிறந்த சட்ட நிபுணர் மட்டுமல்ல. தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரியைத் தோற்றுவித்தவர்.’

‘1946–ம் ஆண்டு பிரகாசம் அமைச்சரவையில் பணியாற்றியவர். ஆர்யா என்ற புனைப்பெயரில் புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்தார். இவர் வரைந்த ஓவியங்களில் மகாத்மா காந்தி படம் புகழ் பெற்றது.

மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர் பஷீர் அகமது, இந்த இருவரின் பெயரும் இணைந்து பாஷ்யம் பஷீர் அகமது சாலையானது. இது வைணவ முஸ்லிம் பெயர்களின் கலவையாக இந்தச் சாலை குறிப்பாக பாஷ்யம் குழுமம் என்ற கட்டுமான நிறுவனம் பல ரியல் எஸ்டேட் திட்டங்களை உருவாக்கியதன் மூலம் பிரபலம் அடைந்தது.

தி.நகரின் விரிவாக்கத்திலும் இப்பகுதியில் நில மேம்பாடுகளிலும் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது. பாஷ்யம் குழுமம், சென்னையில் கட்டிடத்துறையில் வளர்ந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது. ஹாடோஸ் சாலை போன்ற பகுதியில் பெரிய நிலங்களை வாங்கி குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார்கள். பாஷ்யம் சாலை என்பது இரண்டு மாபெரும் ஆளுமைகளான நீதிபதி கே.பாஷ்யம் ஐயங்கார், பாஷ்யம் பஷீர் அகமதுஐ உள்ளடக்கியது.

வெம்பாக்கம் பாஷ்யம் குடும்பத்தைச் சேர்ந்த சர் வி.சி.தேசிகாச்சாரியார் மற்றும் வி.சி. சீனிவாச ஐயங்கார் போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்களாக இருந்தார்கள். புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை அம்புஜம்மாள் சர் பாஷ்யம் ஐயங்காரின் பேத்தி.

பாஷ்யம் – பஷீர் அகமது சாலை ஆழ்வார்பேட்டையின் முக்கிய குடியிருப்பு மற்றும் வரலாற்று பகுதியாக இருக்கிறது. லஸ் சர்ச் சாலை, டி.டி.கே. சாலை, சந்திப்பில், மறுமுனை வரை நீள்கிறது.

இந்தச் சாலையில் உள்ள சதர்ன் காட்டன் இடமானது, நீதிபதி பஷீர் அகமது சயீத் இல்லமாக இருந்தது. 18–ம் நூற்றாண்டில் நீதிமன்றமாகச் செயல்பட்டது. ஸ்ரீநிவாச காந்தி நிலையம். இது சுதந்திரப் போராட்ட வீராங்கனை அம்புஜம்மாள் அவர்களால் தொடங்கப்பட்டது. SIET கல்லூரி (JBAS) நீதிபதி பஷீர் அகமது சயீத்தால் தொடங்கப்பட்டது இந்தக் கல்வி நிறுவனம் ஸ்ரீஅக்ஷயம் உணவகம்.

இரண்டாவது சாலையான பாஷ்யம் சாலை (தி.நகர்). இது பனகல் பூங்காவிற்கு அருகில் இந்தச் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலை பனகல் பூங்காவில் தொடங்கி ஜி.என்.செட்டி சாலை மற்றும் தி.நகர் முக்கிய வணிக பகுதிகளை இணைக்கிறது. பாஷ்யம் சந்தை தி. நகரில் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற காய்கறி மளிகைச் சந்தை. இந்தச் சாலையின் முனையில் தான் பனகல் பூங்கா அமைந்துள்ளது. பனகல் பூங்காவிற்கு மிக அருகிலேயே ஸ்ரீராகவேந்திர மடம் இருக்கிறது. இந்தச் சாலையை தொடர்ந்து சென்னையில் முக்கிய பகுதியான பாண்டி பஜார் மற்றும் புகழ்பெற்ற ஜவுளிக்கடைகள் இருக்கின்றன. சிவன் – விஷ்ணு கோவில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில் இருக்கிறது.

இந்தச் சாலைகள் சென்னையின் சட்ட மேதைகளான சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்கார், கே.பாஷ்யம் ஐயங்கார், பாஷ்யம் பஷீர் அகமது சாலை ஆகியோர்களின் நினைவுகளைக் குறிக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே தி.நகரில் உள்ள பாஷ்யம் சாலைக்குள் நுழைந்தான், மணிகண்டன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *