செய்திகள்

`பாரத் 2026′ தமிழ் பதிப்பு காலண்டர் மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டர்

Makkal Kural Official

சென்னை, ஜன. 3:

மத்திய அரசு சார்பில் `பாரத் 2026′ தமிழ் பதிப்பு காலாண்டரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டர்.

மத்திய அரசின் முக்கிய திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கி ‘பாரத் 2026′ என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் காலாண்டர் தயாரித்து வெளியிடப்பட்டது. இந்த காலண்டரின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு ‘பாரத் 2026′ தமிழ் பதிப்பு காலாண்டரை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த காலண்டர் ‘இந்தியா 2047′ ஐ நோக்கிய ஒரு செயல்திட்ட வழிகாட்டி ஆகும். இது நாட்டின் முன்னேற்றம், எதிர்கால வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. மத்திய அரசின் காலண்டர் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த காலாண்டர் இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 மொழிகளில் வெளியிடப்பட்டு பரந்த அளவில் மக்களை சென்றடைந்துள்ளது.’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் வி.பழனிசாமி, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் கூடுதல் தலைமை இயக்குனர் எம்.வாசுகி, மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் ஜெ.காமராஜ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் பி.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காலாண்டர்

முக்கிய அம்சங்கள்

* ஜனவரி மாதம் தற்சார்பு இந்தியாவை மையமாகக் கொண்டு, தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை வலியுறுத்துகிறது.

* பிப்ரவரி மாதம் விவசாயிகளின் மேம்பாட்டை எடுத்துக்காட்டி, இந்தியாவை உலகின் உணவுக்கிண்ணமாகச் சித்தரிக்கிறது.

* மார்ச் மாதம் மகளிர் சக்தி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலைக் குறிக்கிறது. இதில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் அடங்கும்.

* ஏப்ரல் மாதம் வரிச் சலுகைகள், சட்டங்களை எளிதாக்குதல், தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வசதிகள் மூலம் நடுத்தரப் பிரிவினரின் மேம்பாட்டை வலியுறுத்துகிறது.

* மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியையும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நினைவுகூர்கிறது.

* ஜூன் மாதம் ஆயுஷ்மான் பாரத், மேம்படுத்தப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு, பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.

* ஜூலை மாதம் பின்தங்கிய பிரிவினருக்கான சுகாதார வசதிகளைக் காட்சிப்படுத்துகிறது.

* ஆகஸ்ட் மாதம் இளைஞர் அதிகாரமளித்தலை எடுத்துக்காட்டி, தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர் களின் முக்கியப் பங்கை விளக்குகிறது.

* செப்டம்பர் மாதம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இதில் விரைவு சக்தி, தொழில்துறை வழித்தடங்கள், நான்கு மற்றும் ஆறு வழி நெடுஞ்சாலை திட்டங்கள், விரைவுச் சாலைகள், விமான நிலையங்களின் விரைவான விரிவாக்கம், வந்தே பாரத் ரயில், புதிய பாம்பன் ரயில் பாலம் மற்றும் 2027-ம் ஆண்டுக்குள் முன்மொழியப்பட்ட புல்லட் ரயில் திட்டம் போன்ற ரயில்வே மேம்பாடுகள் அடங்கும்.

* அக்டோபர் மாதம் இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் அதைப் பாதுகாக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.

* நவம்பர் மாதம் தேசிய ஒற்றுமை, பழங்குடியினர் நலன், பிர்சா முண்டாவின் பாரம்பரியம் ஆகியவற்றை நினைவுகூர்கிறது.

* டிசம்பர் மாதம் வசுதைவ குடும்பகம் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் லட்சியங்களை எடுத்துக்காட்டுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *