சென்னை, ஜன. 17–
சென்னை, அடையாரில் அமைந்துள்ள பாட்ரிஷியன் கலை அறிவியல் கல்லூரி, ரேடியோ சிட்டியுடன் இணைந்து தை பொங்கல் பாரம்பரியத்துடனும் பெரும் உற்சாகத்துடனும் கொண்டாடியது.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, ஆண் மாணவர்களுக்கான தனிப்பட்ட “ஆண்கள் பொங்கல் வைக்கும் போட்டி” நடத்தப்பட்டது. இதில் ஆண் மாணவர்கள் பொங்கல் சமைத்தது அவர்களின் பொறுப்பு மற்றும் பண்பாட்டு மரபினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.இவற்றுடன் கோலப் போட்டி, உரியடித்தல், கயிறு இழுத்தல், சாக்குப் பந்தயம் மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
பாட்ரிஷியன் கல்லூரியின் அனைத்து துறைகளும் தங்களுக்கென தனித்துவமான பாரம்பரிய வீடுகளையும், பொங்கல் குடில்களையும் அமைத்து கிராமிய உணவுகளைப் படைத்தனர் . கிராமிய மற்றும் பாரம்பரிய த்துடன் கூடிய அழகாக அலங்கரிக்கப்பட்ட இந்த வீடுகள், குடில்கள், பழமையான கிராம வாழ்க்கையின் அழகை வெளிப்படுத்தியதுடன், கல்லூரி வளாகத்தின் அழகினையும், பண்பாட்டின் ஆழத்தினையும் உணர்த்தும் விதமாக அமைந்தது
இப்பண்பாட்டு நிகழ்வில் சிலம்பாட்டம்,பறையாட்டம், புலி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களும் அரங்கேற்றப்பட்டது . உற்சாகம் நிறைந்த நடன நிகழ்ச்சிகளும் பாரம்பரிய பொங்கல் சடங்குகளும் பொங்கல் விழாவின் சூழலை உருவாக்கின.
ரேடியோ சிட்டி குழுவினரான ரேடியோ ஜாக்கிகள் முந்னா, பாரத், நிதி உள்ளிட்டோர் மற்றும் இக்குழுவின் பிற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடி தைப்பொங்கல்விழாவிற்கு மேலும் உயிர் ஊட்டினர்.
கல்லூரியின் இயக்குநர் மற்றும் செயலர் அருட்சகோ. ரமேஷ் அமலநாதன், கல்வி இயக்குநர் பாத்திமா வசந்த், முதல்வர் ஆரோக்கியமேரி கீதா ரூபஸ், துணை முதல்வர்கள் ஆனந்தப்ரியா (சுழற்சி-–I) மற்றும் மீனா (சுழற்சி-–II) ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
![]()





