செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

Makkal Kural Official

பெங்களூரு, ஆக. 9–

ஆப்பரேஷன் சிந்தூர் நடந்தபோது பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் நீண்ட காலமாக செயல்பட்ட 6 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்திய விமானப்படை தாக்குதலில், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை இன்று விமானப்படை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் 5 போர் விமானங்கள் என்றும், மற்றொன்று மிகப்பெரிய அளவிலான ராணுவ விமானம் என்றும், விமானப்படை தலைமை தளபதி அமர்ப்ரீத் சிங் இன்று அறிவித்தார்.

பெங்களூருவில் நடந்த விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் அமர்ப்ரீத் சிங் இந்த தகவலை தெரிவித்தார். விமான நிலையத்தில் ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எப் 16 ரக போர் விமானங்களும் விமானப்படை தாக்குதலில் சுக்கு நூறாக நொறுங்கின. மிகக்சிறப்பாக திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *