செய்திகள்

பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்:

Makkal Kural Official

வாஷிங்டன், ஜூலை 18–

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது.

பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இன்று வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாதியாகவும் சேர்க்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு ஐ.நா.வால் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்–இ–தொய்பாவின் முன்னணி அமைப்பாக இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு நலனைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவதிலும் அமெரிக்க அதிபர் டிரம்பின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது.

2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட லஷ்கர்–இ–தொய்பாவின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்திய படைகளுக்கு எதிரான பல தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *