செய்திகள்

பழவேற்காடு தீவுகளில் பிளாஸ்டிக் சேகரிப்பு, மரம் நடும் விழா

Makkal Kural Official

பொன்னேரி டிச-13

தமிழ்நாடு வனத்துறை – பழவேற்காடு பறவைகள் சரணாலயம், பிஸ்லெரியின் முதன்மைத் திட்டம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பழவேற்காடு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயம், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை, சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து பழவேற்காடு ஏரி நடுவிலுள்ள திட்டுதீவுகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஒரு பகுதியாக, பறவைகள் வாழும் தீவுகளில் காணப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிற மாசுபட்ட கழிவுகளை அகற்றும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. படகு வழியாக தீவுகளுக்கு சென்று அங்கு இரு அணிகளாக பிரிந்து குப்பைகளை சேகரித்து பின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பனை விதைகள் மற்றும் மரச் செடிகள் நடப்பட்டது.

பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் அனைத்து சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாடு கொண்ட பொதுமக்கள் இந்த தூய்மை பணியில் கலந்து கொண்டு பசுமையான சூழலை பாதுகாப்பதில் தங்களது பங்கினை அளித்தனர்.

நிகழ்ச்சியில் பிஸ்லரி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் தலைமை பொறுப்பாளர் தினகரன், நிர்வாக அலுவலர் ஆர்த்தி பழனிச்சாமி, பழவேற்காடு வனத்துறை வனவர் கோட்டீஸ்வரன், திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் ஹரிஸ்,குன்றத்தூர் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி வார்டன், உதவி பேராசிரியர் அன்பு மணி, நிலையான சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் மகேந்திரன், சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குநர் ஹாஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *