சென்னை, ஆக.15–
இன்று சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார்.

79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கினார்.
உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரசண்ண குமார், வட்டாட்சியர் ப. பாலகிருஸ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ. யமுனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்ககம் இயக்குனர் பா.கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதி திராவிடர்ஆணையர் த.ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குனர் ச.அண்ணாதுரை, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, அரசு செயலாளர் இரா. செல்வராஜ், தமிழ் இணையக் கல்வி கழக இணை இயக்குனர் ஆர்.கோமகன் ஆகியோருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
டாக்டர் குமரவேல்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்ததற்காக திருச்சி டாக்டர் குமரவேல் சண்முகசுந்தரம், கோவை குணசேகரன் ஜெகதீசன் மற்றும் சேலம் எக்காம்வெல் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம், விருதுநகர் பெல் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி– காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருது வழங்கப்பட்டது.
மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் சென்னை பாகீரதி ராமமூர்த்தி, விருதுநகர் மாவட்டம் வட்டாட்சியர் (ஓய்வு) க. மாரிமுத்து மற்றும் சென்னை கருணாலய சமூக சேவை நிறுவனம் திருச்சி சொசைட்டி பார் எஜூகேசன் வில்லேஜ் ஆக்சன் அண்ட் இம்ப்ரூவ்மெண்ட் ஆகியவற்றுக்கு விருது வழங்கப்பட்டது.
விழுப்புரம் சி. சந்துருகுமார், திருநெல்வேலி மு. ஜெயக்குமார், சேலம் த. மாரியப்பன், சென்னை ம. காஜிமா, புதுக்கோட்டை அ. லாவண்யா, கிருஷ்ணகிரி கு. கௌரி ஆகியோருக்கு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த உள்ளாட்சி
அமைப்புகள்…
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலமாக முதல் பரிசு – 6வது மண்டலம் இரண்டாம் பரிசு – 13வது மண்டலத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த மாநகராட்சிக்கான விருது – ஆவடி, நாமக்கல், சிறந்த நகராட்சி – ராஜபாளையம், ராமேஸ்வரம், பெரம்பலூர், சிறந்த பேரூராட்சி – உத்திரமேரூர், திருச்சி காட்டுபுதூர், திண்டுக்கல் நத்தம் ஆகியவற்றுக்கு விருது வழங்கப்பட்டது.
![]()





