செய்திகள்

பரோடா வங்கி கணக்குகளுக்கு இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை

Makkal Kural Official

மும்பை, ஜூலை 8–

சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நீக்கியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அதற்காக கட்டணம் வசூலிப்பதை வங்கி நிறுத்தியுள்ளது. அனைத்து சாதாரண வகை சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த கட்டண நிறுத்தம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி மாதாந்திர சராசரி இருப்பு குறைந்தாலும், வாடிக்கையாளர்கள் அதற்காக ஒரு தொகையை இழக்கத் தேவையிருக்காது. பிரீமியம் வகை சேமிப்புக் கணக்குகளுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *