செய்திகள்

பராசக்தி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்: திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது

Makkal Kural Official

இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை

சென்னை, ஜன. 9–

பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பராசக்தி’ படம். சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை 10–ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. ஜனநாயகன் படத்தை போலவே, ‘பராசக்தி’ படத்துக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. தணிக்கை வாரியம் ‘பராசக்தி’ படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் பரிந்துரை செய்திருந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

இந்த நிலையில், கோர்ட்டின் உத்தரிவின் பேரில் தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது. ஜனநாயகன் திரைப்பட வெளியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய தணிக்கை வாரியம் சான்று வழங்கியதை அடுத்து நாளை திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.

இணைய தளங்களில்

வெளியிட தடைஇந்த நிலையில், நாளை திரைக்கு வர உள்ள பராசக்தி திரைபடத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரபட்டது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருள் செலவில் திரைப்படம் எடுக்கபட்டுள்ளதால், சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பராசக்தி படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *