செய்திகள்

பரமக்குடி அருகே இன்று அதிகாலை லாரி–கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Makkal Kural Official

ராமநாதபுரம், ஆக. 31–

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இன்று அதிகாலையில் லாரி–கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி காரில் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் டிரைவர் மணக்குடி காளீஸ்வரன் (28), ராமநாதபுரம் ஜமுனா (55), ரூபிணி 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோவிந்தராஜ் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *