செய்திகள்

பட்டு – பருத்தியில் 13 பேருக்கு சிறந்த நெசவாளர் விருது : ஸ்டாலின் வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, ஜன. 3:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-–2025–ம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 8 விருதாளர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 2 விருதாளர்களுக்கு 1.50 இலட்சம் ரூபாயும், சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாயும், என மொத்தம் 13 விருதாளர்களுக்கு 23.75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்நாட்டில் 1,115 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-–2025–ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 5 லட்சம் ரூபாய் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எம்.ஆர்.கோபிநாதனுக்கும்,

இரண்டாம் பரிசிற்கான 3 லட்சம் ரூபாய் தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வி.ராஜலட்சுமி மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பி.கெளரி ஆகிய இருவருக்கும் தலா 1.50 லட்சம் ரூபாயும்,

மூன்றாம் பரிசிற்கான 2 லட்சம் ரூபாய் தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஜி.மாலா மற்றும் திருப்பூர் மாவட்டம், தந்தை பெரியார் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எஸ்.ராஜவேல் ஆகிய இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

பருத்தி இரகத்தில் சிறந்தவர்கள்

2024–-2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பருத்தி இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 5 லட்சம் ரூபாய் ராமநாதபுரம் மாவட்டம், மகாகவி பாரதியார் பருத்தி மற்றும் பட்டு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஆர்.பாஸ்கரனுக்கும், இரண்டாம் பரிசிற்கான 3 லட்சம் ரூபாய் கோயம்புத்தூர் மாவட்டம், வதம்பச்சேரி ஸ்ரீ நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எஸ்.ராஜனுக்கும்,

மூன்றாம் பரிசிற்கான 2 லட்சம் ரூபாய் திருப்பூர் மாவட்டம், கோவில் வழி பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பி.கந்தசாமிக்கும், என மொத்தம் 8 விருதாளர்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

2024–-2025–ம் ஆண்டுக்கான சிறந்த வடிமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 1 லட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம், சென்னிமலை தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் அப்புசாமி கிருஷ்ணனுக்கும், மூன்றாம் பரிசிற்கான 50 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வி.கண்ணனுக்கும், என மொத்தம் 2 விருதாளர்களுக்கு 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

இளம் வடிவமைப்பாளர்

2024–-2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 1 லட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை ஜவுளி தொழில்நுட்ப பொறியியல் துறையில் நான்காமாண்டு பயிலும் மாணவர் எஸ்.எஸ்.விமலுக்கும்,

இரண்டாம் பரிசிற்கான 75 ஆயிரம் ரூபாய் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவி ஆர்.மதுமிதாவுக்கும், மூன்றாம் பரிசிற்கான 50 ஆயிரம் ரூபாய் திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நூட்பக் கல்லூரியில் பொறியியல் இளங்கலை ஜவுளி தொழில்நுட்ப துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பி.டி. மோனிகாவுக்கும், என மொத்தம் 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கதர்த் துறை அரசு செயலாளர் வே.அமுதவல்லி, கைத்தறித் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *