புதுடெல்லி, ஆக. 27–
பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய விநாயகர் சதுர்த்தி நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து இயக்கங்களான இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றன.
இதையொட்டி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வாழ்த்துப் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த புனிதமான தருணத்தில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும். கணேஷ பகவான் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ராகுல்
ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:–
விநாயகர் சதுர்த்தி திருநாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல தருணம் உங்கள் அனைத்து தடைகளையும் நீங்கி மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
![]()





