செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு

Makkal Kural Official

நெல்லை, ஜூலை 18–

நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், பள்ளி பஸ்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால், மாணவன், பள்ளிக்கு வரும் போது, பூச்சி மருந்து சாப்பிட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் உடலை வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவன் பயின்ற பள்ளியின் இரு பஸ்கள் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால், இரு பஸ்களும் தீக்கிரையாகின. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து போராட்டத்தியில் ஈடுபட்டுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். அந்த பகுதியில் பதட்டம் நிலவியால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *