இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்
ராமேஸ்வரம், ஆக. 4–
நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விசைப்படகையும் சிறைப் பிடித்துச் சென்றனர். நாளுக்கு நாள் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் நிலையில், தற்பொழுது மீண்டும் மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()





