சென்னை, செப். 30–
நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த விஜய், முகமதுபிலால், முகமது ஆசிக் ரூவேத் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 0.63 மில்லி கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
![]()





