செய்திகள்

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

Makkal Kural Official

சென்னை, அக். 19–

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் புகார் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *