செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டோம்

Makkal Kural Official

மதுராந்தகம், ஜனவரி 24:

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். கடந்த கருத்து வேறுபாடுகளை மறந்து இனி ஒன்றாக செயல்படுகிறோம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, சீரழிவு நிறைந்த நிர்வாகத்திற்கு முடிவு காணும் தேர்தல் இது” என தெரிவித்தார்.

டிடிவி தினகரன், “முன்னொரு பிரச்சினைகள் இருந்தாலும் இனி ஒன்றாகவே செல்வோம். மக்கள் பாதுகாப்பற்ற சூழல், மாம்பழங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்” என்று கூறினார்.

அன்புமணி ராமதாஸ், “மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் மக்கள் பங்கேற்றனர். 2 மாதங்களில் அண்ணா திமுக தலைமையில் ஆட்சி அமைக்கும்” என உறுதி செய்தார்.

இந்த கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் நோக்கத்துடன் தேர்தலை சந்திக்கவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *