செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் செயலிழப்பு டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

Makkal Kural Official

புதுடில்லி, டிச. 22–

ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம், மும்பைக்கு புறப்பட்டு சென்றது. வானத்தில் பறந்த சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதாவது, இரு என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்து விட்டது. இதனால், விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

அதன்படி, டெல்லி விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, மீண்டும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில், பயணிகள், ஊழியர்கள் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த அசவுகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்தது. மேலும், மீண்டும் விமானம் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *