செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானம் பழுது: கொச்சியில் அவசர தரையிறக்கம்

Makkal Kural Official

கொச்சி, டிச. 18:

நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால் 160 பயணிகள் உயிர்தப்பினர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 160 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதன் காரணமாக அந்த விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து கொச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பழுது காரணமாக ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்குவது குறித்த தகவல் கிடைத்தவுடன், அனைத்து அவசர சேவைகளையும் தயார் நிலையில் வைத்தோம். காலை 9.07 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதன்பிறகு ஆய்வு செய்த போது விமானத்தின் வலது பக்கம் உள்ள இரு டயர்களும் வெடித்திருந்தன என தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *