செய்திகள்

நடிகை ஸ்ரேயா சரண் பெயரை பயன்படுத்தி WhatsApp மோசடி – ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை

Makkal Kural Official

சென்னை, நவம்பர் 19:
நடிகை ஸ்ரேயா சரண் தனது பெயரை பயன்படுத்தி WhatsApp-ல் ஆள்மாறாட்டம் செய்து பிறரை தொடர்புகொள்வதாக ஒருவர் மோசடி செய்து வருவதை குறித்து ரசிகர்களையும் நண்பர்களையும் எச்சரித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அந்த WhatsApp கணக்கின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டுள்ள ஸ்ரேயா, “இந்த முட்டாள் யாராக இருந்தாலும் மக்களை தொடர்புகொள்வதும் அவர்களின் நேரத்தை வீணடிப்பதும் உடனே நிறுத்த வேண்டும். இது நான் அல்ல; இது என் எண் அல்ல,” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த போலி கணக்கு தொடர்பு கொள்கிறவர்கள் நான் பெரிதும் மதிக்கும் மற்றும் பணியாற்ற விரும்பும் நபர்கள். இது மிகவும் விசித்திரமானது. பிறரின் அடையாளத்தை பயன்படுத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம்; உங்கள் வாழ்க்கையில் ஏதாவது நல்லதை ஆரம்பியுங்கள்,” என்று அவர் பதிவு செய்துள்ளார்.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் இதேபோன்ற WhatsApp ஆள்மாறாட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். “எனது பெயரில் யாரோ புகைப்பட கலைஞர்களிடம் பேசி வருகின்றனர். அது நான் அல்ல. என் தனிப்பட்ட எண்ணை நான் வேலைக்காக பயன்படுத்துவதில்லை. யாரும் இப்படிப் வரும் செய்திகள் மீது பதில் அளிக்க வேண்டாம்,” என்று தெரிவித்திருந்தார்.

சினிமா பணிகள் தொடர்பாக, ஸ்ரேயா சரண் சமீபத்தில் தேஜா சஜ்ஜா நடித்த மிராய் படத்தில் நடித்திருந்தார். தமிழில் நடிகர் மெட்ரோ ஷிரிஷ் நடிக்கும் நான் வயலன்ஸ் படத்தில் இடம்பெறும் ‘கனகா’ பாடலில் அவர் நடனமாடியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *