சென்னை, டிச.6-
த.வெ.க. தலைவர் விஜய்யை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து தன்னை த.வெ.க.வில் முறைப்படி இணைத்துக்கொண்டார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
தமிழக அரசியலில் அதிக அளவு இளைஞர்களை விஜய் ஈர்த்து வைத்து இருக்கிறார். விஜய் என்னிடம் நான் உங்கள் ரசிகன் என்றார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தி.மு.க. ஆதரவாளராக இருந்த என்னை தி.மு.க.வினர் அநாகரீகமாக நடத்தினர். தி.மு.க.வில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது, அது வேறு. விஜய்க்கு ஆதரவாக நான் பேசியதால் தி.மு.க.வினர் எனக்கு நெருக்கடி, மிரட்டல் விடுத்தனர். விஜய்யை சந்தித்தபோது புதிதாய் பிறப்பதை போல் உணர்ந்தேன்.
இனி தமிழகம் முழுவதும் விஜய்க்கு ஆதரவாக நான் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். அரசியலில் விஜய் சிறப்பாக செயல்படுகிறார். திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில விஷயங்களில் அவர் கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது கூட நல்லது தான். இல்லையென்றால் கருத்தை திரித்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





