சென்னை, ஜூலை 7–
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தனித்துவமான ஆளுமை
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றிய ஒரு ஒரு தனித்துவமான ஆளுமை பெற்ற ஜாம்பவான்.
வாழ்வின் மகத்துவம் என்பது பிறப்பால் வருவதில்லை, மாறாக, அது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது என்பதை உங்கள் வாழ்வில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். ஒவ்வொரு முடிவாலும், ஒவ்வொரு ஓட்டத்தாலும், ஒவ்வொரு அமைதியான வெற்றியாலும் மகத்துவம் கட்டமைக்கப்படுகிறது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
![]()





