கதைகள் சிறுகதை

தொலைவிலிருந்து ஒரு துளி…

Makkal Kural Official

-: டிக்ரோஸ் :-

விஞ்ஞானி மணி கொஞ்சம் தாமதமாகவே வந்தார். அவருடைய ஆழ்விளக்குக் கண்ணாடியோடு (அதாங்க magnifying glass), மெதுவாக செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பசுமை ஹால் வழியாக நுழைந்தார்.

“தண்ணீர் ” என்று மிதந்து வந்த கண்ணன் குரல் வரவேற்றது!

கண்ணன் – ‘HydroNet Corporation’ என்ற பன்னாட்டு நீர் நிறுவனத்தின் தலைவர்.

ஒரு தெளிவான கண்ணாடிப் பொத்தானை விரலால் தட்டினார் மணி.

“தட தட்!”

தொட்டியின் நடுவில் உள்ள சிறிய குழியிலிருந்து ஒரு நீர்த் துளி பாய்ந்து வந்தது. கொஞ்ச நேரத்தில் அது ஒரு கண்ணாடி கோப்பையில் மிளிர்ந்தது.

“இது Earth Aqua-aa வா…?”

“இல்ல… GJ 876-d – எச் 183267 நட்சத்திர மண்டலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.”

மணி புன்னகையுடன் கூறினார்.

“அது 2025… ஹப்பில் டெலிஸ்கோப்பில் (Hubble Telescope) அந்த நட்சத்திர மண்டலத்தில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்த போது, அன்றைய மூத்தவர்கள் தங்கள் வீட்டு சிறுவர்கள் அதைப் புரிய வைத்து, விஞ்ஞானப் போட்டிகளில் விளக்கம் தர பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் கைதட்டும் பரிசு மழையிலும் நனைந்தனர்!

ஆனால் யாரும் ஒருநாள் அந்த நீர் தான் குடிக்கப்போறோம்’னு கனவில் கூட நினைக்கல!”

கண்ணன் சிரித்தார்.

“நினைக்கல. ஆனா பாருங்க… இப்ப அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் நீருக்குத்தான் அதிகமான கிரேடுகள் இருக்கு. TDS 2.3 ppm. சாதாரண பூமி நீரைவிட நச்சுப் பொருள்கள் குறைவானவை.”

மணி ஒரு தடவை தலை ஆட்டினார்.

“நீங்க சொல்றீங்கல… நான் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் மட்டும் குடிக்கிறேன். அது கூட ரேஷன் மாதிரி – HydroPass இல்லாதவங்க குடிக்க கூட முடியாது.”

சற்று மெளனம்.

அவர்கள் இருவரும் ஹால் ஏரியாவின் கூரையை நோக்கிப் பார்த்தனர். சூரியனின் உலர்ந்த கதிர்களில் மிதக்கும் ஓரளவு பசுமை. ஒவ்வொரு மூச்சிலும் ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட ஆக்ஸிஜனின் ப(க)சப்புச் சுவை.

“ஓடிப் போய் ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்து குடிநீர் எடுத்து வந்த நாட்கள்…”

என தான் படித்து தெளிந்ததை மணி மெதுவாக மனதில் அசை போட்டபடி சொன்னார்.

“நமக்கு மட்டும்தான் ஞாபகம். இப்போ கார்பனேடைட் (Carbonatite) இல்லாத பகுதிகளில் பிறந்த பிள்ளைகளுக்கு ‘நதி’னு சொன்னா என்னனு கேட்பாங்க!”

அந்த சமயத்தில் பெரும் திரையில் ஒரு அரிய தலைப்புச் செய்தி மின்னியது:

“விண்வெளியிலிருந்து நீர் இறக்குமதி – சாத்தியம் உறுதி”

இன்றைய நிலவுச் சந்தையில் எச் 183267 நீர்த் துளிகள் விற்பனை தொடக்கம்

HydroNet விண்வெளி ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு…

மணி வாசித்தவுடன் சிரித்தார்.

“இப்போ நம்ம Satellite Cold Tanks–ல இருக்குற ஹைட்ரஜன் மூலமான ஈரப்பதத்தை வைத்து தண்ணீர் உருவாக்குறோம். ஆனால் இது… இது விண்வெளி நீர்!”

அப்போது ஒரு சிறிய ரோபோ இயங்க ஆரம்பித்தது.

அதன் பெயர்: ‘துளி-47’ !

விண்வெளிப் பயணிகளுக்கு பிறந்த நீர் வினியோக கூற்று. அதன் கண்ணாடிப் பையில் இன்னொரு நட்சத்திரத்திலிருந்து வந்த மஞ்சள் நிற நீர்.

மணியின் முகத்தில் சற்றே ஏமாற்றம்.

“நீங்க கூட அந்த நீரை பார்த்து நெகிழறீங்க?”

” சுடுகாடுகளையும் நகரங்களாக மாற்றினோம் .அத நீங்க கண்முன் சிறு வயதில் பார்த்தவர். ஆனா கண்ணன் நீங்க ஒரு ஆறையும் மீட்டதில்ல. இப்ப நீர் இருக்கு. ஆனா ஓடிப்போய் கையால் ஏந்தி குடிக்கிற சுகம் போச்சு…”

கண்ணன் கோப்பையை எடுத்து, மெதுவாக அதன் மீது எழும் நீர் குமிழியை பார்த்தார்.

“நாம் எவ்வளவு உயர்வுகள் கண்டாலும் சுத்தமான தண்ணீர் கானல் நீராகிவிட்டது,

வாசனையில்லா நீர்த் துளி.”

ஒரு சிறுவன் என்னிடம் ஒரு முறை கேட்டது, நீர் சுவை என்ன , மனம் இருக்குமா?

I said ‘it’s just… data and molecules’ (தரவு மற்றும் மூலக்கூறுகள்) !

“முந்தைய காலத்து தண்ணீர் மனசுக்கே சுவையாக இருக்கும் பாப்பா…” என அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வர , தலைகுனிந்து புன்னகைத்தான்.

இதைப் படிக்கும் உங்களுக்கு இப்போதே சொல்லிக் கொள்ள விரும்புவது :

“மனிதன் விண்வெளியில் தண்ணீர் தேடினான். ஆனா பூமியில் நதி தேடும் குழந்தைகள் எண்ணிக்கையைக் கவனிக்கவில்லை.”

decrose1963@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *