மதுரை, டிச. 11:
அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களையும் அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 44 வார திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா தி.மு.க. அம்மா பேரவை போர்ப்படை வீரர்கள் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட கடுமையாக உழைத்து வருகிறீர்கள். தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் மக்கள் பேரதரவுடன், இந்திய திருநாடே உற்று நோக்கு வகையில், வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு, பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில் எடப்பாடியார் ஆற்றிய பேருரை தமிழகத்தின் தலைப்புச் செய்தியாக உள்ளது. தமிழகம் எங்கும் இதன் மூலம் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் அமர்ந்து, மகத்தான மக்கள் சேவைக்கு காலம் கனிந்து வந்துள்ளது. குறிப்பாக எடப்பாடியாரின் பேச்சு தங்க கிரீடத்தில் வைரங்கள் பதித்ததாக அமைந்துள்ளது. குறிப்பாக பல்வேறு புள்ளி விவரங்களை எடப்பாடியார் எடுத்துரைத்து தமிழகத்தை ஆச்சரியப்படுத்தி வைத்துள்ளார். புதைந்து கிடைக்கும் உண்மைகளை தோண்டி கண்டெடுத்து போல அவருடைய உரை மதிநுட்பத்துடன் இருந்தது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் என இரு கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் 41.33 என்பதை ஒப்பிட்டு அடுத்து வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று எடுத்துரைத்தது தேர்தல் வியூகத்தை எடுத்து வைத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் எட்டரை கோடி மக்களுக்கு புதிய நம்பிக்கையும், புதியும் விடியலையும் தந்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல்படி 50வது வார பொன்விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது நடைபெறும் 44வது திண்ணைப் பிரச்சாரத்தில் எடப்பாடியார் ஆற்றிய வீர உரையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வீதி, வீதியாக சென்று இல்லும்தோறும் எடுத்துரைக்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறும் இடி அமீன், முசோலினி போன்ற சர்வாதிகார ஆட்சி இனி தமிழ்நாட்டில் இல்லை என்ற புதிய வரலாற்றை எடப்பாடி பழனிசாமி உருவாக்குவார். தமிழகத்தில் மீண்டும் ஜனநாயக சுதந்திரம் பெரும் வகையில் எடப்பாடி பழனிசாமி களம் கண்டு வருகிறார். நிச்சயம் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெரும் வகையில் சூளுரை ஏற்று அம்மா பேரவை தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()





