செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ.73,280க்கு விற்பனை

Makkal Kural Official

சென்னை, ஜூலை 26–

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த 23ம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இந்நிலையில் 24-ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *