செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 3–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

சவரனுக்கு ரூ.320 உயர்வு

அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9 ஆயிரத்து 65க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 105 ரூபாய்க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 121 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு கிலோ 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *