செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, நவ.12-–

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதியும், நேற்றும் இருகட்டங் களாக நடந்து முடிந்தது. வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டு, பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகள் நடத்தின. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஏறத்தாழ அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், ஆட்சியை பிடிக்க குைறந்தபட்சம் 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

‘டைனிக் பாஸ்கர்’ நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில், பா.ஜ.க. கூட்டணிக்கு 143 முதல் 160 தொகுதிகளும், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு 73 முதல் 91 தொகுதிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு பூஜ்யம் முதல் 3 தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

‘மாட்ரிஸ்’ நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில், பா.ஜ.க. கூட்டணிக்கு 147 முதல் 167 தொகுதிகளும், மகா கூட்டணிக்கு 70 முதல் 90 தொகுதிகளும், ஜன் சுராஜ் கட்சிக்கு பூஜ்யம் முதல் 2 தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

‘தி பீப்பிள்ஸ் இன்சைட்’ நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க. கூட்டணிக்கு 133 முதல் 148 தொகுதிகளும், மகா கூட்டணிக்கு 87 முதல் 102 தொகுதிகளும், ஜன் சுராஜ் கட்சிக்கு பூஜ்யம் முதல் 2 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தி பீப்பிள்ஸ் பல்ஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜனதா கூட்டணிக்கு 133 முதல் 159 தொகுதிகளும், மகா கூட்டணிக்கு 75 முதல் 101 தொகுதிகளும், ஜன் சுராஜ் கட்சிக்கு பூஜ்யம் முதல் 5 தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

14-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது, ஆட்சியை பிடிப்பது யார் என்று தெரிந்து விடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *