செய்திகள்

தேனியில் தடையை மீறி தடையை மீறி மாடு மேய்க்கும் சீமான்

Makkal Kural Official

தேனி, ஆக. 3- தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடவுப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் போலீஸ் தடையை மீறி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடந்தது.

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை கண்டித்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அடவுபாறையில் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி இன்று அவர் அடவுப்பாறையில் ஆயிரக்கணக்கான கால்நடைகளுடன் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என ஏராளமானோர் சென்றனர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அனுமதியில்லை என தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது:

மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து

எனவே ஓட்டுரிமை வேண்டும்.

இலங்கையில் எங்களை குண்டு போட்டு கொன்றார்கள், அது இனப்படுகொலை. இங்கு குடிக்க வைத்து கொல்கிறான், இதுவும் இனப்படுகொலை. இவன் 5 லட்சம் பேரை 5 ஆண்டில் கொல்கிறான். இரண்டும் ஒன்றுதான். இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் ஆக சிறந்த நாடாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள் எல்லாம், கோடி கனவுகள் கொண்டோம்.

அதனை நிறைவேற்ற வாருங்கள், ஓடி வாருங்கள் என் மக்களே. அவங்களுக்கு தெரியாது. கூடி ஆடு, மாடு என்றால் என்ன என்று நினைத்து கொண்டு இருக்கிறான். ஆடு, மாடுகள் மேய்ப்பது தொழில்முறைகள் அல்ல; எங்களது வாழ்க்கை முறை, கலாசாரம், பண்பாடு. மாட்டுப்பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள். கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன; மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை. ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே

நம்மை இணைக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *