செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

Makkal Kural Official

ஜோகன்னஸ்பர்க், டிச. 21–

தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில், மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு ஏன் நடந்தது என்பதற்கான காரணம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

அன்று ஆஸ்திரேலியா; இன்று தென் ஆப்ரிக்கா! கடந்த ஞாயிற்றுக்கிழமை (14–ந்தேதி) ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் ‘ஹனுக்கா’ எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 16 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *