செய்திகள்

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Makkal Kural Official

திருவண்ணாமலை, அக். 10–

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 7321 மி.கன அடி ஆகும். அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. அணையின் கொள்ளளவு 6263 மி.கன அடி ஆகும். திருவண்ணாமலை அணையில் அணையின் மாவட்டம் சாத்தனூர் ஒழுங்குமுறை விதிகளின்படி தற்போது வினாடிக்கு 2000 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 4000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றபடுவதலும் அணையிலிருந்து மதியம் 12.00 மணியளவில் வினாடிக்கு 4000 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்ற படலாம் என தெரிவித்துக்கொள்ளபடுகிறது.

மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினை பொருத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் இருகரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையின் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *