செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை: ராமதாஸ் அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஜன. 12–

தி.மு.க. கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பா.ம.க.வில் இருந்து நீக்கம் செய்து ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாமகவில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதல் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது உச்சத்தை சந்தித்திருக்கிறது. தொடர்ந்து இறுதி தரப்பும் ஆதரவாளர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர்.தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகவும் கட்சியின், சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இதனை ராமதாஸ் மறுத்து வருகிறார். இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பினரை நீக்கி வருகிறார்கள்.

ஜி.கே. மணியை

நீக்கியத்திற்கு பதிலடி

பா.ம.க.வுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். கடந்த மாதம் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வாகவும், பா.ம.க. செயல் தலைவராகவும் இருக்கும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க டாக்டர் ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் அன்புமணிக்கு எதிராக எம்.எல்.ஏ. அருள் கருத்துகளை கூறி வந்த சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்

நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதற்கு பதிலடியாக, அன்புமணி ஆதரவாளர்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஷ்வரன் ஆகிய மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி மூன்று பேர் மீது ராமதாஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக பொதுச்செயலர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.07 2025 ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று 12.01.2026 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் பலவிதமான யூகங்கள்; பலவிதமான பேச்சுகள், உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். அதை நீங்கள் (ஊடக நண்பர்கள்) எப்படி எடுத்துக்கொள்வீர் என்பதை பொறுத்து. பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் என்னிடம் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

கேள்வி:- உங்களுடைய விருப்பம் என்ன?, தே.ஜ.கூட்டணியில் இருந்து இல்லை என்பது குறித்து நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்களா..?..

பதில்:- இது இன்னும் முடிவு எடுக்கவில்லை. நாட்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது; விரைவில் முடிவு எடுப்போம்.

கேள்வி:- புதிய கூட்டணிக்கு போவதற்கான சூழல் உருவாகியுள்ளதா?

பதில்:- நீங்கள் என்ன சொல்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். தேர்தல் நேரத்தில் எதையும் உறுதிபட சொல்ல முடியாது.

கேள்வி:- திமுக கூட்டணி பேச்சுவார்த்தை பரிசீலனையில் உள்ளதா?

பதில்:- ஆமாம்.

இவ்வாறு அவர் கூறினார்.”,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *