மதுரை, நவ. 25:
தி.மு.க அரசின் மெத்தனபோக்கின் நடவடிக்கையால் தான் டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் மழையால் நனைந்து விவசாயகள் கண்ணீர் கடலிலே தற்பேது தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளதாவது:
தி.மு.க ஆட்சியின் நான்கரை ஆண்டு பிறகு தமிழக உரிமைகள் குறித்து வாய்திறந்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். தி.மு.க அரசின் மெத்தனபோக்கின் நடவடிக்கையால்தான் டெல்டா மாவட்டங்களில் 6லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் மழையால் நனைந்து விவசாயிகள் கண்ணீர்கடலிலே தற்பேது தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்து விவசாயிகள் அறுவடை செய்வார்கள் என்பது அரசிற்கு நன்றாக தெரியும். ஆனால் தி.மு.க அரசின் அலட்சியத்தால் 15 நாட்களில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமல் இருப்பதால் மிளா துயரத்தில் கவலையோடும், கண்ணீரோடும் தங்கள் வாழ்வாரத்தை தொலைத்தனர்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்திற்கு உரிய நடவடிக்கைகளுக்காக டெல்டா மாவட்டத்திற்கு நேரிலே சென்று விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி விவசாயிகளின் கண்ணீரை துடைத்தார். சட்ட மன்றத்திலும் விதி எண்-55-ன் கீழ் சிறப்பு கவணஈர்ப்பு தீர்மானமும், விதி எண் – 56-ன் கீழ் அவை ஒத்திவைப்பு தீர்மானமும் விவசாயிகளுக்காக கொண்டு வந்தார். மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்து நானும் டெல்டாகாரன் என்று வீரவசனம் பேசிய மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டத்தில் பலலட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் காய்ந்து கருகி போனது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா?
விவசாயிகளின் பயிர்களுக்கு காப்பீடு கூட செய்யாத இந்த அவலநிலையில் இந்த ஆட்சியின் மீது விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த நிலையிலே தமிழக உரிமைகளை அடகு வைக்கவா? என்று தமிழக உரிமைகளை பற்றி நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு வாய்திறந்திருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பதோடு, எடப்பாடியார் விவசாய மக்களுக்கு செய்த சரித்திர சாதனை நினைவுட்டுகிறோம். 50ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகண்டு வரலாற்று சாதனை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. டெல்டா மக்களிடத்தில் கேட்டுப்பாருங்கள் யார் விவசாயிகளின் பாதுகாவலர் என்று கேட்டால் எடப்பாடியார் என்றுதான் கூறுவார்கள். விவசாயிகளுக்காக காவேரி உரிமையை மீட்டுத்தந்ததும், முல்லை பெரியாறு உரிமையை பாதுகாத்ததும், கச்சத்தீவு மீட்புகாக சட்டபோராட்டம் நடத்தியதும். பாலாறை பத்திரமாக பாதுகாத்ததும் அண்ணா தி.மு.க. ஆட்சித்தான் என்கிற வரலாற்றை மறந்த ஸ்டாலினுக்கு அம்மா பேரவை சார்பிலே கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





